வடமராட்சி கிழக்கு
-
Featured
கடலை அழிக்கிறதா கரைவலை?
கட்டுரை மற்றும் படங்கள் | ஜெரா, பிபிசி அறிமுகக் குறிப்பு “கரைவலை மீன்பிடி (Beach Seine Fishing) என்பது ஆழமற்ற கடற்கரைப் பகுதிகளில், கரையில் நின்றுகொண்டு நீண்ட வலையை கடலில் விரித்து, இருபுறமும் கயிறுகளைப் பிடித்து மனிதவலுவைப் பயன்படுத்தி இழுத்து மீன் பிடிக்கும் பாரம்பரிய முறையாகும்.” இம்மீன்பிடி முறையானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடைமுறையில் இருந்து வருகின்றது. தற்போது கடற்றொழிலில் நவீன மாற்றங்கள் பல நிகழ்ந்தமை காரணமாக கரைவலை மீன்பிடியிலும் மனிதவலுவிற்குப் பதிலாக உழவியந்திரங்களைக்கொண்டு வலை இழுக்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆயினும்…
Read More » -
Featured
யார் கொன்றார் அவரை?
கட்டுரை மற்றும் படம் | North East Narrative யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு இருக்கிறது. இப்பகுதியினுள் மணற்காடு, குடத்தனை, செம்பியன்பற்று, மருதங்கேணி, தாளையடி, உடுத்துறை, வெற்றிலைக்கேணி எனப் பல கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தப் பிராந்தியத்தின் ஓர் எல்லைப் பகுதியாகக் காணப்படும் ஆழமான இந்துமா கடலை நம்பியே இங்கு அனேகமான குடும்பங்கள் வாழுகின்றன. தம் வீட்டின் குடும்பத்தலைவர்கள் கடலுக்குப் போய் மீண்டால் மாத்திரமே அன்றைய நாளில் அடுப்பெரியும் நிலையில்தான் அனேகமான குடும்பங்களின் பொருளாதார நிலையும் உள்ளது. இந்தப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பங்களில்…
Read More »