மலையகம்
-
சனநாயகத்தின் பெயரால் ஒரு சதி: மலையகமும் PSTA சட்டமும்
கட்டுரை | அருள்கார்க்கி | படம் | Daily Mirror ஒரு கறுப்புச் சட்டத்தின் மறுவடிவம் இலங்கையின் சமகால அரசியல் வரலாற்றில் ‘தேசிய பாதுகாப்பு’ என்பது ஆட்சியாளர்களினால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரோபாயச் சொல்லாகவே இருந்து வருகின்றது. 1979 ஆம் ஆண்டு, ஒரு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட ‘பயங்கரவாதத் தடைச் சட்டம்’ (Prevention of Terrorism Act – PTA), கடந்த நான்கு தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் வாழ்வியலையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் சிதைத்த ஒரு கறுப்புச் சட்டமாகவே நீடித்துக்கொண்டிருக்கிறது. சர்வதேச…
Read More » -
இலங்கை இறப்பர்: காலநிலைப் போர்
கட்டுரை | அருள்கார்க்கி | படம் | Ada Derana அறிமுகம் இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் தேயிலைக்கு அடுத்தபடியாக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மிக முக்கிய பயிராக இறப்பர் விளங்குகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பயிர், இன்று இலங்கையின் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுதோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டின் பாரிய சவாலான காலநிலை மாற்றம் (Climate Change), இலங்கையின் இறப்பர் கைத்தொழிலை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. புவி வெப்பமடைதல், மழையற்ற காலங்களின்…
Read More » -
இயற்கையுடன் ஓர் உடன்படிக்கை
கட்டுரை | அருள் கார்க்கி | படம் | Anas Mohamed Nuski ஒரு தீவு தேசத்தின் காலநிலைச் சவால்கள் இலங்கையின் பொருளாதாரத்தின் பிரதான அச்சாணியாக விளங்கும் தேயிலைத் துறை, இன்று புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் இலங்கை தேயிலை (Ceylon Tea) வர்த்தகம், இன்று 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் அந்நியச் செலாவணியில் பெரும் பங்கையும் தீர்மானிக்கிறது. எனினும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அதீத வெப்பநிலை,…
Read More » -
இடப்பெயர்வா நிலமிழப்பா?
கட்டுரை | அருள்கார்க்கி | படம் | North East Narrative இலங்கையின் மலையகத் தமிழ் சமூகம், நாட்டின் பொருளாதாரத்திற்கு இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக முதுகெலும்பாகத் திகழ்ந்த போதிலும், இன்று காலநிலை மாற்றத்தின் பெயரால் ஒரு புதிய ‘அரசியல் இடப்பெயர்வை’ (Political Displacement) எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது. 2025 நவம்பரில் தாக்கிய டிட்வா (Ditwah) சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளைக் காரணியாகக் கொண்டு, மலையக மக்களை அவர்களது பூர்வீக நிலத்திலிருந்து வடகிழக்கு மாகாணங்களை நோக்கி மீள்குடியேற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகின்றன.…
Read More »