Jera
-
சுற்றுலா
தமிழர் மரபுரிமை சுற்றுலா
கட்டுரை மற்றும் படம்| North East Narrative நமது கடந்த காலத் தலைமுறைகள் நமக்காக விட்டுச்சென்றவைகள் மரபுரிமைகள் ஆகும். அவை நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இதனைத் தொட்டுணரக்கூடிய மரபுரிமைகள் (Tangible Heritage) எனவும், தொட்டுணர முடியாத மரபுரிமைகள் (Intangible Heritage) எனவும் இரண்டாக வகுப்பர். நினைவுச்சின்னங்கள், பண்டைக்கால கட்டடங்கள், கலைப்பொருட்கள் போன்றன தொட்டுணரக்கூடிய மரபுரிமைகளாகவும், பண்டைக்கால தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலைநிகழ்ச்சிகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் கதைகள், மரபுவழிப் பாடல்கள் போன்றன தொட்டுணரமுடியாத மரபுரிமைகளாகவும் கொள்ளத்தக்கன. மரபுரிமைகள் என்ன செய்யும்? இத்தகைய மரபுரிமைகள், எதிர்கால…
Read More » -
Featured
அநீதிக்குப் பிரபலமான நாடு
கட்டுரை மற்றும் படங்கள் | North East Narrative இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், திருக்கோணமலை மாவட்டத்தில், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் மட்டக்களப்பு வீதியில் அமைந்திருக்கிறது குமாரபுரம் கிராமம். பல தலைமுறைகளாகத் தமிழர்கள் வாழும் இக்கிராமத்தைச் சூழ பரந்த வயல்வெளிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்த வயலை நம்பியே அக்கிராமத்தவர்களின் பொருளாதாரம் தங்கியுள்ளது. இத்தகைய கிராமமானது 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி மிகப்பெரிய படுகொலையைச் சந்தித்தது. இலங்கை அரச படைகளும், துணை இராணுவக் குழுவினரும் இணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது சிறுவர்கள், கர்ப்பிணிப்…
Read More » -
Featured
இடப்பெயர்வா நிலமிழப்பா?
கட்டுரை | அருள்கார்க்கி | படம் | North East Narrative இலங்கையின் மலையகத் தமிழ் சமூகம், நாட்டின் பொருளாதாரத்திற்கு இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக முதுகெலும்பாகத் திகழ்ந்த போதிலும், இன்று காலநிலை மாற்றத்தின் பெயரால் ஒரு புதிய ‘அரசியல் இடப்பெயர்வை’ (Political Displacement) எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது. 2025 நவம்பரில் தாக்கிய டிட்வா (Ditwah) சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளைக் காரணியாகக் கொண்டு, மலையக மக்களை அவர்களது பூர்வீக நிலத்திலிருந்து வடகிழக்கு மாகாணங்களை நோக்கி மீள்குடியேற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் அண்மைக் காலமாக வலுப்பெற்று வருகின்றன.…
Read More » -
Featured
அபகரிக்கப்பட்ட நிலம்
நேர்காணல் | North East Narrative | படம் | Selvarajah Rajasekar செல்வராஜா ராஜசேகர் என அறியப்படுகின்ற சுயாதீனப் பத்திரிகையாளர், ‘மாற்றம்’ இணையதளத்தின் பிரதம ஆசிரியராவார். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தயாரிப்பில் குச்சவெளி பிரதேசத்தில் இடம்பெறும் நிலஅபகரிப்பு, அதனூடாக மேற்கொள்ளப்படும் பௌத்தமயமாக்கல் குறித்து, ”குச்சவெளி” என்னும் தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றினை இயக்கியுள்ளார். அந்த ஆவணப்படம் குறித்து North East Narrative இணையதளத்திற்கு அவரளித்த நேர்காணல் இங்கே பிரசுரமாகிறது. குச்சவெளி ஆவணப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? குச்சவெளி நில அபகரிப்பு பிரச்சினைகள் நாளாந்தம் பத்திரிகைகளிலும்,…
Read More » -
Featured
யார் கொன்றார் அவரை?
கட்டுரை மற்றும் படம் | North East Narrative யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு இருக்கிறது. இப்பகுதியினுள் மணற்காடு, குடத்தனை, செம்பியன்பற்று, மருதங்கேணி, தாளையடி, உடுத்துறை, வெற்றிலைக்கேணி எனப் பல கிராமங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தப் பிராந்தியத்தின் ஓர் எல்லைப் பகுதியாகக் காணப்படும் ஆழமான இந்துமா கடலை நம்பியே இங்கு அனேகமான குடும்பங்கள் வாழுகின்றன. தம் வீட்டின் குடும்பத்தலைவர்கள் கடலுக்குப் போய் மீண்டால் மாத்திரமே அன்றைய நாளில் அடுப்பெரியும் நிலையில்தான் அனேகமான குடும்பங்களின் பொருளாதார நிலையும் உள்ளது. இந்தப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட குடும்பங்களில்…
Read More » -
நம்பிக்கை
நம்பிக்கையைக் கைவிடாதிருக்கும் சுமதி
கட்டுரை மற்றும் படங்கள் | North East Narrative போர் முதலில் சிறுவர்களையும் பின்னர் பெண்களையும் மோசமாகப் பாதிக்கும் என்பர். அதற்கு தகுந்த சாட்சிகளை இலங்கையின் வட மாகாணத்தில் இருக்கின்ற வன்னிப் பெருநிலம் கொண்டிருக்கிறது. போர் பாதிப்புக்களிலிருந்து மீண்டுவரமுடியாத நிலையில் பெண்கள் பலர் வாழ்ந்துகொண்டிருக்க, அதிலிருந்து மீண்டுவர அயராது உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களையும் காணமுடிகின்றது. பொருளாதார ரீதியாகவும், சமூக அந்தஸ்து ரீதியாகவும் மேலேவர அவர்கள் பெரும்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக எவ்விடத்திலும் சோர்ந்துவிடாது தொடர்ந்தும் போராடிக்கொண்டிருப்பவர்தான், செல்வாநகர், நட்டாங்கண்டல் கிராமத்தில் வசிக்கும் அன்ரன் யோன்சன் சுமதி. நான்…
Read More » -
சுற்றுச்சூழல்
கல் வியாபாரத்திற்காக அழிக்கப்படும் காதலியார் சமளங்குளம்
கட்டுரை | North East Narrative படம் | T.Ravikaran முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது காதலியார் சமளங்குளம் எனும் கிராமம். வன்னிப் பெருநிலப் பரப்பிலிலிருந்து ஆங்கிலேயர்களோடு போரிட்டு வீரமரணமடைந்த குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் வரலாற்றோடு தொடர்புபடும் இந்தக் கிராமானது விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் பெயர்பெற்றதாகும். இலங்கையின் வடமாகாணத்தில் இருக்கின்ற வன்னிப் பெருநிலப் பரப்பு இயற்கை வளங்களால் நிரம்பப்பெற்றது. வனமும் நிலமும், கடலும் குளமும், மணலும் மலையும், பெருநிலத்தின் அடையாளங்களாக இருக்கின்ற இயற்கை வளங்கள். வன்னிப் பெருநிலப் பரப்பை இலங்கை…
Read More » -
காணாமலாக்கப்படுதல்
கண்ணீரால் நனைந்தது மழை
Story and Picture | North East Narrative யாழ்ப்பாணத்திலிருந்து கூப்பிடுதொலைவில் இருக்கிறது அல்லைப்பிட்டி கிராமம். யாழ்.குடாநாட்டோடு இணைந்த தீவுக்கூட்டங்களில் ஒன்றாகிய ஊர்காவற்றுறையில் அல்லைப்பிட்டி கிராமம் இருக்கிறது. இக்கிராமத்தில் மிகத் தொன்மையான காலத்திலிலிருந்தே தமிழ் மக்கள் வாழ்ந்தமைக்கும், கடல்சார் வணிகத்தில் ஈடுபட்டமைக்குமான தொல்லியல் ஆதாரங்கள் உண்டு. இந்தக் கிராமத்தில்தான் ”மம்மி” என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் நோபர்ட் பவுலீன் அம்மா (80) வசித்து வருகிறார். அவரைப் பார்த்ததும், வயதில் மூத்தவரான இவர், கடந்த காலம் தொடர்பான நினைவுகளை தவறவிட்டிருப்பார் என்கிற முடிவுக்கு வருவது பொதுவானது.…
Read More » -
காலநிலை மாற்றம்
இலங்கையின் காலநிலை நீதி
கட்டுரையாளர் | அருள்கார்க்கி படம் | North East Narrative இலங்கை தற்போது தனது வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் அதேவேளை, காலநிலை மாற்றத்தினால் மிக அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகவும் சர்வதேச மட்டத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜேர்மன்வாட்ச் (Germanwatch) காலநிலை அபாயச் சுட்டெண்ணின் படி, இலங்கை உலகளவில் மிக உயர்ந்த ஆபத்துள்ள நாடாகக் குறிக்கப்பட அதன் புவியியல் அமைவிடமும், பொருளாதாரத்தின் பலவீனமுமே முக்கிய காரணிகளாகும். இலங்கையின் மொத்தத் தொழிலப்படையில் சுமார் 38 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்திலும், 1340…
Read More »